விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு... விநாயர் பற்றிய செய்திகள்
எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் அந்த காரியம், எந்தவித தடையின்றி சிறப்பாக நடக்கும், வெற்றி கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை. தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை "முழுமுதற் கடவுள்" என்றும், கோயிலில் முதலில் அமர்ந்திருப்பவரும், முதலாவதாக வணங்கக் கூடியவராகவும் விநாயகர் உள்ளார்.

ராகவன் மாணிக்கம்
9710482215
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு...
முழுமுதற் கடவுளான அவரைப் பற்றிய சில செய்திகள்
எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் அந்த காரியம், எந்தவித தடையின்றி சிறப்பாக நடக்கும், வெற்றி கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை "முழுமுதற் கடவுள்" என்றும், கோயிலில் முதலில் அமர்ந்திருப்பவரும், முதலாவதாக வணங்கக் கூடியவராகவும் விநாயகர் உள்ளார்.
பிள்ளையார், விநாயகர், கணபதி, கணேஷன் என பல்வேறு பெயர்களை வைத்து வணங்கக் கூடிய முதல் கடவுளாக இருப்பவர் விநாயகப் பெருமான்.
தாய், தந்தையின் பேச்சைக் கேட்டு மதித்து செயல்பட்ட பிள்ளை என்பதால் அவருக்கு பிள்ளையார் என பெயர் வந்தது.
களிமண், சாணம், மஞ்சள் என எந்த பொருளால் செய்து விநாயகரை வழிபட்டாலும் அருள் புரிவார்.
அவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.
அப்படி எந்தெந்த பொருளால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். அவை
► மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
► சந்தனத்தால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் பிள்ளைபேறு கிட்டும்.
► மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்.
► புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்
► கருங்கல்லினால் ஆன விநாயகரை வழிபட்டால் எந்த காரியமும் வெற்றியில் முடியும்.
► விபூதியால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.
► குங்குமத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
► உப்பினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் பகைவர்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
► வெல்லத்தினால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் கஷ்டங்கள் விலகும்.
► சர்க்கரையால் செய்யப்பட்ட கணபதியை வழிபட்டால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.
► பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி, வீட்டில் விரைவில் சுப நிகழ்ச்சி நடக்கும்.
► வெள்ளெருக்கில் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால் பில்லி, சூனியம் அகலும்.
► வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்
► வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்
--------------------------------------
அதே போல், விநாயகரை எந்த திசையில் வைத்து வணங்க வேண்டும், என்ற சில முறைகளும் உண்டு.
நம் வீட்டில் எந்த சுபகாரியத்தினை ஆரம்பித்தாலும் முதலில் விநாயகரை வணங்கிதான் தொடங்குவோம்.
அதிலும் விநாயகருக்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பானது.
அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இருக்கும் விநாயகரை நாம் மங்கலகரமான விழாக்களின் போது பெரும்பாலும் வீட்டில் ஹால் அல்லது பூஜை அறையில் வைத்து தான் வணாங்குவோம்.
விநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும்.
விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடதுபுறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்த வண்ணமே இருக்க வேண்டும்.
விநாயகரின் பின்புறமானது வீட்டின் எந்த ஒரு அறையினையும் பார்த்தப்படி இருக்கக்கூடாது. ஏனெனில் அவரின் பின்புறம் வறுமையினை குறிக்கும் என்பதால் வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தப்படி தான் இருக்க வேண்டும்.
தென்புற திசையில் விநாயகரை வைத்து வணங்க கூடாது. கிழக்கு அல்லது மேற்கு புறமாக தான் வைத்து வணங்கவேண்டும்.
கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரை வைக்கக்கூடாது. அதே போன்று அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக்கூடாது.
உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகர் என்றால் கிழக்கு அல்லது மேற்கு திசையினை பார்த்து வைத்து வணங்கவேண்டும்.
வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது இன்னும் சிறப்பான பலனை தரும்.
வீட்டிற்குள்ளாக மாடிப்படி இருந்தால் அதற்கு அடியில் விநாயகரை வைக்கக்கூடாது. ஏனெனில் மாடிப்படிகளில் ஏறி நடப்பது அவரின் தலை மீது ஏறி நடப்பதை போன்றதாகும். இது துரதிர்ஷ்டத்தினை ஏற்படுத்தும்.
----------------------------------------------
முதன்மை தெய்வமான விநாயகர் பல விதமான பெயர்களில் வணங்கப்படுகிறார்.
அவைகள்...
- பாலகணபதி
- தருண கணபதி
- பக்த கணபதி
- வீர கணபதி
- சக்தி கணபதி
- துவஜ கணபதி
- சித்தி கணபதி
- உச்சிஷ்ட கணபதி
- விக்கினராஜ கணபதி
- ஷிப்ர கணபதி
- ஹேரம்ப கணபதி
- லட்சுமி கணபதி
- நிருத்த கணபதி
- ஊர்த்துவ கணபதி
- ஏகாட்சர கணபதி
- வர கணபதி
- திரியட்சர கணபதி
- ஷிப்ரப்பிரசாத கணபதி
- ஹரித்திரா கணபதி
- ஏகதந்த கணபதி
- சிருஷ்டி கணபதி
- உத்தண்ட கணபதி
- ரிணமொச்சக கணபதி
- துண்டி கணபதி
- துவிமுக கணபதி
- திரிமுக கணபதி
- சிம்ம கணபதி
- துர்க்கா கணபதி
- யோக கணபதி
- சங்கடஹர கணபதி
----------------------------------------------
யுகங்கள் தோறும் பல்வேறு பெயர்களில் அவதரித்த விநாயகப் பெருமானுக்கு, ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு வாகனங்கள் இருந்திருக்கின்றன. அவை:
கிருதாயுகத்தில் சிம்ம வாகனம்
திரேதாயுகத்தில் மயில் வாகனம்
துவாபரயுகத்தில் மூஷிக வாகனம்
----------------------------------------------
விநாயகரை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன்கள், கிடைக்குமாம். காரணம்
விநாயகரின் தொந்தி பிரம்மனின் அம்சம்.
முகம் திருமாலின் அம்சம்.
இடப்பாகம் பார்வதியின் அம்சம்.
வலப்பாகம் சூரியனின் அம்சம்.
கண்கள் சிவனின் அம்சம்.
எனவே கணபதியை வணங்கி சகல தெய்வங்களையும் வணங்கிய பலன்களை பெறலாம்.
----------------------------------------------
விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.*
விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் அர்ச்சனைக்கு துளசி பயன்படுத்தலாம். மற்ற நாட்களில் விநாயகர் பூஜையில் துளசி பயன்படுத்தக் கூடாது.
- அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற
- வில்வம் - இன்பம் அடைய
- அரசு - உயர் பதவி கௌரவம் அடைய
- மாவிலை - அறம், நீதி காக்க
- துளசி - கூர்மையான அறிவினை பெற
- மாதுளை - பெரும் புகழ் அடைய
- அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற
- நாயுருவி - வசீகரம் உண்டாக
- கண்டங்கத்திரி - வீரம் உண்டாக
- தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட
- மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற
- ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற
- நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக
- இலந்தை - கல்வி ஞானம் பெற
- ஊமத்தை - பெருந்தன்மை உயர
- தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற
- கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க
- எருக்கு - வம்ச விருத்தி அடைய
- மருதம் - குழந்தை பேறு அடைய
- அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட
- வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடையலாம்.