விநாயகர் பரிசுப்போட்டி

விநாயகனே விநாயகனே  நம்பி வரும் பக்தர்களுக்கு  அருள் புரிபவனே  ஆனை முகத்தானே 

விநாயகர் பரிசுப்போட்டி
விநாயகர் பரிசுப்போட்டி

விநாயகனே விநாயகனே 

நம்பி வரும் பக்தர்களுக்கு 

அருள் புரிபவனே 

ஆனை முகத்தானே 

அகிலத்தின் அனைத்தையும் அறிந்தவனே 

அப்பா-அம்மா தான் 

உலகமென ஊருக்கே -உன் 

செயலால் நிரூபித்த 

முழு முதற் கடவுளே 

உன் தும்பிக்கையில் உள்ளதய்யா 

எங்கள் நம்பிக்கை 

முச்சந்தியிலும் இருந்தாலும் ,

கோபுரத்தில் இருந்தாலும் 

எளியோர் வலி உணர்ந்து காப்பவனே 

அப்பனுக்கும் அறிவுரை கூறிய 

ஆசானே 

ஈசனே உன்னிடத்தில் கற்க 

கடலளவு உள்ளதய்யா 

நாயகா 

வேறு யாருய்யா ?

நீயே என் விநாயகா!

-லி.நௌஷாத் கான்-

கும்பகோணம்