Vinayagar Kavithai

ஆடல் வல்லானின் தலை  மகனே /  அன்னையின் அன்பைப்  பெற்ற முதல்வனே /  பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளையே /  பிரணவ மந்திரத்தின்  பொருளே கணபதியே  / 

Vinayagar Kavithai

+++++++++++++++++++++++++++
            தலைப்பு : விநாயகர்….
+++++++++++++++++++++++++++
ஆடல் வல்லானின் தலை 
மகனே / 
அன்னையின் அன்பைப் 
பெற்ற முதல்வனே / 

பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளையே / 
பிரணவ மந்திரத்தின் 
பொருளே கணபதியே  / 

ஞானக் கடவுளே தகப்பன்
சாமியே / 
ஆனை முகத்தோனே 
அருகம்புல் ஆண்டவனே / 

கந்தனுக்கு மூத்தோனே 
கலியுக நாயகனே / 
இல்லங்களின் இன்னல்களை
இல்லாது ஆக்குபவனே / 

கருணையின் நாயகனே 
கவலையைத் தீர்ப்பவனே / 
கற்பகத் தருவாய்க் கனகம் பொழிபவனே  / 

பெருமான் முகமே யானை 
முகம்தானே / 
மூஷிக வாகனனே மோதக 
விரும்பியே / 

பார்க்கப் பார்க்கச் சலிக்கா 
முகம்தானே / 
உன்னை சரணடைகிறேன் 
காத்தருள்வாய் அய்யனே / 

என்றும் அன்புடன்
சே.நா.அசோகன் / சேலம்

Mobile :9384262908

                  @@@@@@