அகரம் முதல் ஔகாரம் வரை

முத்தமிழ் அடைவினை முற்பட கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே!

அகரம் முதல் ஔகாரம் வரை
அகரம் முதல் ஔகாரம் வரை

அத்தி முகத்தோனே அரசமரத்தடி அமர்ந்தவனே!

ஆனைமுகத்தோனே ஆறுமுகன் சகோதரனே!

இம்மையிலும் மறுமையிலும் இடரின்றி காப்பவனே

ஈசன் தலைமகனே ஈடு இணையற்ற செல்லமே!

உண்மைப்பரம்பொருளே! உமையவள் தன் மகனே!

ஊழ் விணை ஒழிப்பவனே! ஊர் காக்கும் உத்தமனே!

எளியோர்க்கு எளியவனே எங்கும் நிறைந்தோனே!

ஏரம்ப கணபதியே ஏற்றம் அளிப்பவனே!

ஐந்து கரத்தோனே! ஐம்பூதம் ஆனவனே!

ஒப்பில்லாமணியே ஒன்றில் பலவானவனே !

ஓம் எனும் பிரணவனே  ஓங்கார பரம்பொருளே!

 ஔவைக்கு அருளியவனே  ஔதடமாய் இருப்பின்!


உனது திருவடி சரணம்!! சரணம்!!

சிவ.முத்து லட்சுமணன்
போச்சம்பள்ளி