முழுமுதற் கடவுளே!

பிள்ளையார் துதி!  அம்மையப்பன்தான் உலகமென .. தம்பிக்கு உணர்த்திய கணபதியே... நம்பிக்கையோடு இருகரம் கூப்பி கும்பிட்டால் தோன்றும் குணநிதியே...!

முழுமுதற் கடவுளே!

                                பிள்ளையார் துதி!                                                                                         அம்மையப்பன்தான் உலகமென ..

தம்பிக்கு உணர்த்திய கணபதியே...

நம்பிக்கையோடு இருகரம் கூப்பி

கும்பிட்டால் தோன்றும் குணநிதியே...!

சங்கரன் மைந்தனே, சங்கரி புதல்வனே....

சங்கடங்கள் தமைப் போக்கிடுவாய்...

ஐங்கரக் கடவுளே ..ஷண்முகன் தமையனே ....

மங்காத புகழைத் தந்திடுவாய்...!

எள்ளுருண்டை ,மோதகம் விருப்புடனேற்பாய்..

துள்ளி வரும் மூஷிகத்தின் மீதேறி வருவாய்..!..

புள்ளி மயில் வாகனனின் மனமறிந்தே.. -குற

வள்ளியை மணம் புரிய துணை நின்றாய்...!

காகத்தின் உருவில் கமண்டலம் கவிழ்த்து

காவிரி பாய்ந்தோடச் செய்தவனே...!

பாம்பணை துயிலும் திருமாலை கடல்

தாண்டாது தடுத்த பிள்ளையாரப்பனே!

ஔவை இறைஞ்சியதால் மனமிரங்கி

யௌவனம் நீக்கிய கஜமுகனே ..

மௌட்டியம் அகற்றி .. ஞானத்தை அருளும் 

கௌரி சுதனே ..விக்ன விநாயகனே ...!..