விநாயகர் பரிசுப்போட்டி
ஆதிபராசக்தியின் அருந்தவ புதல்வனே... ஆக்கச் செயல் அனைத்திற்கும் என்றும் நீ துணைவனே..! காரியங்கள் கைகூட கணபதி நாமமே... கட்டுமனைகளில் குடியேற கணபதி ஹோமமே..!
ஆதிபராசக்தியின் அருந்தவ புதல்வனே... ஆக்கச் செயல் அனைத்திற்கும் என்றும் நீ துணைவனே..!
காரியங்கள் கைகூட கணபதி நாமமே... கட்டுமனைகளில் குடியேற கணபதி ஹோமமே..!
அம்மையுடன் நிற்கும் அப்பனையும் அகிலமெனச் சுற்றி கிடைக்கப்பெற்றாய் மாம்பழம் அன்று...
உம்மோடு நிற்கும் அரச மரத்தையும் சேர்த்தே சுற்றுகிறேன் எப்போது கிடைக்கும் ஞானப்பழம் என்று..!
வேழமென வேடமிட்டாய் வேலவனின் காதலுக்காய் - உன்
வேழ முகத்தையே வேடமிட்டு மகிழ்கிறோம் நின்-பிறந்த நாளுக்காய்..!
பச்சரிசி மாவினை பக்குவமாய் பிசைந்து பக்தியுடன் படைத்தேன் மோதவம்...
அம்மோதவத்தை உண்டு நின் பேரருளை தந்தால் அதுவே யாம் பெறும் பெருந்தவம்..!
முதன்மைக்கும் முன்னவனே! மூஞ்சூறு வாகனனே!
கந்தனுக்கு மூத்தவனே! எந்தையுமாய் ஆனவனே!
சிந்தையில் நிற்பவனே! சித்தியை அளிப்பவனே!
வினையைத் தீர்ப்பவனே! வேழமுகம் கொண்டவனே!
எம்பெருமான் விநாயகனே!
இந்நாள் மட்டுமின்றி...
எந்நாளும் நீயே நாயகனே!