கவிதை
ஐங்கரனே....கணேசா கனிவுடனே இங்கு வந்திடு சங்கரனின் தலைமகனே மங்களங்கள் தந்திடு..!

ஐங்கரனே....கணேசா கனிவுடனே
இங்கு வந்திடு
சங்கரனின் தலைமகனே
மங்களங்கள் தந்திடு..!
உமையாளின் தவச்செல்வா
எமைப் பரிவுடன் பார்த்திடு
சுமையாகும் துன்பங்கள்
தமையணுகாமல் காத்திடு..!
அல்லவை நீக்கி ..
நல்லவை புரிந்திடு...
தொல்லைகள் களைந்து வல்லமை நல்கிடு...!
தொட்டவை யாவும் பட்டெனத் துலங்கிடச் செய்திடு..
கெட்டனவாயின் உடனிருந்து
சட்டென விலக்கிடு...!
நம்பியுன்னைச் சரணடைந்தோம்..
தும்பிக்கையானே அணைத்திடு..
பாதகமேதும் வாராது
மோதகப்ரியனே தடுத்திடு..!
சுற்றம் சூழவே வாழ்ந்திடப் பணித்திடு..
குற்றம் பாராட்டாது
உறவாட நவின்றிடு
கற்றுத் தெளிந்த நல்மனம்தனை அருளிடு.!
எற்றைக்கும் உன் நினைவில் வாழ்ந்திடப் பரிந்திடு...!