" விநாயகர் பரிசுப்போட்டி"
பிள்ளையார் சுழி போட்டு காரியத்தை தொடங்கு எல்லையில்லா இன்பம் வரும் உனக்கு நூறு மடங்கு தேவை இல்லை இதைத் தவிர வேறு எந்த சடங்கும் முடங்கிய காரியம் உன் முட்டிக்குள் அடங்கும்

உ
பிள்ளையார் சுழி போட்டு காரியத்தை தொடங்கு
எல்லையில்லா இன்பம் வரும் உனக்கு நூறு மடங்கு
தேவை இல்லை இதைத் தவிர வேறு எந்த சடங்கும்
முடங்கிய காரியம் உன் முட்டிக்குள் அடங்கும்
கும்பிடுவாய் அவனை தவறாமல் தினந்தோறும்
தும்பிக்கையான் அருளால் நினைத்தது நிறைவேறும்
அம்பிகையின் அரும் புதல்வன் ஐங்கரன் அவனை
நம்பி கெட்டார் யாருமில்லை நன்கறிவாய் இதனை
தன்னகத்தே ஒன்றில்லை என்றாலும் கூட
தன் பக்தருக்கு அதை அருள்வான் மிக மிக கூட
தனி மரமாய் அவனேதான் இருந்தாலும் கூட
தம்பிக்கு வழி சொன்னான் வள்ளியுடன் கூட
பெற்றோரைச் சுற்றி வந்தே தான்
பெற்றானே அவனும் ஞானப்பழம்
அதன் பிரகாரம் நாமும் சுற்றுவோம்
அவன் கோவில் பிரகாரம்
அவனுக்கு கிடைத்தது ஞானப்பழம்
நமக்குக் கிடைத்திடும் யானை பலம்
கற்பனைக்கும் எட்டாத
அற்புதங்கள் பற்பலவும்
அற்பமென ஆகிடுமே அவன்
பொற்பதங்கள் கண்ட பின்னே
தோப்புக்கரணமிட்டே தொழுதிடுவோம் ஐங்கரனை
காப்பு அவன் தானே அழித்திடுவாய் ஐயத்தினை
அர்ச்சனை செய்தேதான் வணங்கிடுவோம் அனுதினமும்
பிரச்சனைகள் வாராது ஐயமில்லை அனுவளவும்.