விநாயகர் சதுர்த்தி

விநாயகரின் திருநாமங்களும் அதன் விளக்கங்களும்....!   பிள்ளையார் வழிபாடு ஆதிமனித வழிபாட்டின் தொடர்ச்சி என்பதை குறிக்கும் வகையில் பிள்ளையாரின் பெயர்களில் ஒன்றான “கணபதி” திகழ்கிறது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

விநாயகரின் திருநாமங்களும் அதன் விளக்கங்களும்....!

  பிள்ளையார் வழிபாடு ஆதிமனித வழிபாட்டின் தொடர்ச்சி என்பதை குறிக்கும் வகையில் பிள்ளையாரின் பெயர்களில் ஒன்றான “கணபதி” திகழ்கிறது.

 கணம் என்றால் தனித்தனி குழுவாக வாழ்ந்த ஆதிமனித வாழ்கையை குறிப்பதாகும்.

 பதி என்றால் அரசன், தந்தை, பாதுகாப்பவன் என்பதை குறிப்பதாகும். ஆக கணங்களின் பதி என்றால் குழுத்தலைவன் என்பதை குறிக்கிறது. 

இவர்  கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

திருநாமங்களும் அதன் விளக்கங்களும் :

 கணேசன் - உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.

ஏகதந்தன் - ஏக எனில் மாயை, தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு.

 சிந்தாமணி - சிந்தை - மனம்;, மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.

விநாயகன் - 
வி - நிகரற்ற, நாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.

மயூரேசன் -
 வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன்.

லம்போதரன் - 

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன்.

 கஜானனன் - 
ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன், யானைமுகன்.

ஹேரம்பன் -

 ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்பன் - காப்பவன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.

வக்ர துண்டன் - பக்தர்தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.

 ஜேஷ்டராஜன் - ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.

 நிஜஸ்திதி - உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.

ஆசாபூரன் - எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவச் புருசுண்டி முனிவர்.

வரதன் -
 வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.

விகடராஜன் - 
மாயையான உலகில், உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.

தரணிதரன் -
 பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

பிரும்மணஸ்தபதி - இப்பெயர் பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.

மாங்கல்யேசர்- 
அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர்.

சர்வ பூஜ்யர் - 
எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர்.. எல்லோராலும் வணங்கப்படுபவர்.

 விக்னராஜன் - 
தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர்...