விநாயக சதுர்த்தி-சிறப்பு கவிதை

பிள்ளையாரின்           பிறந்தநாள்! (இசைப் பாடல்) பிறந்தநாள் பிறந்தநாள்             ....எங்கள்

விநாயக சதுர்த்தி-சிறப்பு கவிதை

பிள்ளையாரின்
          பிறந்தநாள்!

(இசைப் பாடல்)

பிறந்தநாள் பிறந்தநாள்
            ....எங்கள்
பிள்ளையாரின் பிறந்தநாள்!
பிறந்தநாள் பிறந்தநாள்
            .....எங்கள்
விநாயகருக்குப் பிறந்தநாள்!
             (பிறந்த நாள்)

சிறந்தநாள் சிறந்தநாள்
           ....எங்கள்
சீர்கணபதியின் பிறந்தநாள்!சிறந்தநாள் சிறந்தநாள்
ஆனைமுகனின் சிறந்தநாள்!
        (பிறந்தநாள்)

பிறந்தநாள் பிறந்தநாள்
     ....பூதகணத்
தலைவனுக்குப் பிறந்தநாள்
பிறந்தநாள் பிறந்தநாள்
        ......எங்கள்
கணேசருக்குப் பிறந்தநாள்!
        (பிறந்தநாள்)

சிறந்தநாள் சிறந்தநாள்
         ......முழு
முதற்கடவுளின் சிறந்தநாள்!
சிறந்தநாள் சிறந்தநாள்
          .....சிவ
மைந்தனின் சிறந்தநாள்!
          (பிறந்தநாள்)

பிறந்தநாள் பிறந்தநாள்
        .....எங்கள்
ஐந்துகரனுக்குப் பிறந்தநாள்!
பிறந்தநாள் பிறந்தநாள்  
        ......பார்வதி
மைந்தனுக்குப் பிறந்தநாள்!
        (பிறந்தநாள்)

சிறந்தநாள் சிறந்தநாள்
         ......பால
கணபதியின் சிறந்தநாள்!
சிறந்தநாள்
சிறந்தநாள்
       ....சித்தி
விநாயகருக்குச் சிறந்தநாள்!
         (பிறந்தநாள்)


முனைவர்
இராம.வேதநாயகம்
வடமாதிமங்கலம்
திருவண்ணாமலை
606907
பேசி:
98431 47981

அருள்தரும் தெய்வம் இதழ்
சந்தா எண்:
A D M 2025 00914