விநாயகர் போற்றி

அன்பே வடிவாய் விளங்கும் ஆனை முகக் கடவுளே! போற்றி!! இன்னல்கள் எல்லாம் நீக்கிவிடும் ஈசன் மகன் கணேசனே! போற்றி!!

விநாயகர் போற்றி

அன்பே வடிவாய் விளங்கும் ஆனை முகக் கடவுளே! போற்றி!!
இன்னல்கள் எல்லாம் நீக்கிவிடும் ஈசன் மகன் கணேசனே! போற்றி!!

உன் பாதம் சரண் அடைந்தோம்! உமையாள் மைந்தனே! போற்றி!!
ஊக்கம் அளித்து உயர்த்திடுவாய்! எங்கும் நிறை கணபதியே! போற்றி!!

ஏற்றம் எப்போதும் தந்திடுவாய்! ஐந்து கரம் உடையவனே! போற்றி!!
ஒருநாளும் உந்தனை மறவேன்! ஓங்கார வடிவுடையோனே! போற்றி!!

அரசமரத்து அடியில் வீற்றிருப்பாய்! ஔவைக்கு அருளியவனே! போற்றி!!
நம்பிக்கை தந்து காத்திடுவாய்! தும்பிக்கையானே! போற்றி!! போற்றி!!

- By Lalitha Balasubramaniyan